66 வீதம் உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை, 3 வீதம்தான் குறைப்பார்களாம்
கடந்த பெப்ரவரி மாதம் முதல் 66 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தை எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து 3.15 வீதத்தினால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) அறிவித்துள்ளது.
எனினும், மின்சார கட்டணம் தொடர்பில் உரிய முறையில் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டால் ஆகக்குறைந்தது 27 வீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் மின்சார சபையின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இன்று அறிவித்துள்ளார்.
Post a Comment