535 கோடி பணத்துடன் சென்ற வாகனம் பழுதாகி நின்றதால் பரபரப்பு
சென்னையில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 கண்டெய்னர் லாரிகளில் பணத்தை ஏற்றிக்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்டபோது தாம்பரம் அருகே ஒரு லாரி பழுதானது.
இதனால் இரண்டு லாரிகளையும் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.
பணத்துடன் நிற்கும் லாரிகளுக்கு, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Post a Comment