Header Ads



நுரைச்சோலையின் ஒரு பகுதி 100 நாட்களுக்கு பூட்டு


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இதன்படி, ஜூன் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மின் உற்பத்தி நிலையத்தின் 03 ஆவது அலகு மூடப்படும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு ஏதும் இருக்காது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


மேலும், பாரிய பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் இந்த காலப்பகுதியில் ஏனைய அனல் மின் நிலையங்களுடன் இணைந்து அதனை நிர்வகித்து மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.