Header Ads



ஹிஸ்புல்லாஹ், அஹ்னாபுக்கு நடந்ததை ஞாபகமூட்டும் இம்தியாஸ் Mp


புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு அவர்களின் சொந்த வியாக்கியாணங்களை அளித்து எதிர்தரப்புகளை அடக்குவதற்கு முயற்சிக்கின்றனர். அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,  ஊடகங்களை  அடக்கும் சட்டமூலமொன்றாக இது  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வடக்கின் கவிஞரொருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி எந்தவித குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைத்தார்கள். வாழ்க்கையின் சிறந்த காலம் கைதியாக கடக்க வேண்டியிருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வழியில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையாகும். மனித உரிமை மீறலாகும்.


எனவே நாம் இச்சட்டமூலம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். இந்த சட்டமூலத்தை மிகவும் கவனமாகவும் ஆழமாகவும் நோக்க வேண்டியுள்ளது.


தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் 6 மாத காலத்திற்கு மட்டுமே என கொண்டுவரப்பட்டது. ஆனாலும் பல ஆண்டுகளாக இதைப் பயன்படுத்துகிறோம்.  என்பதை மறந்துவிடாதீர்கள். 


இது உண்மையில் மக்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டதா? அல்லது தமக்கு எதிரான நிலைப்பாடுகள் கருத்துக்களைக் முன்வைக்கும் நபர்களை அடக்குவதற்கு கொண்டு வரப்பட்டதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

https://fb.watch/jYMHMuUeS6/


No comments

Powered by Blogger.