Header Ads



விட்டமீன் D குறைபாடு அதிகரிப்பு - மக்கள் செய்யவேண்டிய அவசியமான செயற்பாடு


நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 


சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 


விட்டமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். 


சூரிய ஔியின் மூலமே மனித உடலுக்கு அவசியமான விட்டமின்  D ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 


காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஔியில் இருந்து அதிக அளவில் விட்டமின்  D ஊட்டச்சத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார். 


சாதாரணமாக நாளொன்றுக்கு 15 நிமிடங்களேனும் சூரிய ஔி உடலுக்குக் கிடைப்பது அவசியம் என பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.