Header Ads



நீர்கொழும்பிலும், அதனை சூழவுள்ள பகுதிகளினதும் அவலம்


- Ismathul Rahuman -


     நீர்கொழும்பில் 60 வீதமான அரச நிறுவனங்களின் சூழல் டெங்கு நுளம்பு பரவும் அபாய நிலையில் உள்ளதாக நீர்கொழும்பு சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.


    தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டன.


       பிரதான அரச நிறுவனங்களும் இவற்றில் அடங்குவதுடன் சில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இன்னும் சில அரச நிறுவனங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கடிதம் விநியோகிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


      தமது சொந்த இடங்களை துப்பரவாக வைத்திருப்பது போல, பொது இடங்களையும் நிறுவனங்களையும் நுளம்பு பரவாத சூழ்நிலையில் வைத்திருப்பது கடமை புரியும் ஊழியர்களின் பொறுப்பு எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


      நீர்கொழும்பில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்மாதம் இதுவரை 156 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


    மார்ச் மாதத்தில் 200 டெங்கு நோயாளர்கள் இனம்கானப்பட்டனர்.


     பிடிப்பன, குரண, பெரியமுல்லை, தழுபொத்த, பலகத்துறை, கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனம் கானப்பட்டுள்ளனர்.


  சுகாதாரப் பிரிவினர் இப்பிரதேசங்களில் வீடுவீடாகச் சென்று பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.