கொழும்பு ஜாவத்த பள்ளிவாசலின் பாராட்டத்தக்க செயற்பாடுகள் (படங்கள்) ஏனைய நிர்வாகங்களுக்கு முன்மாதிரி
அப்பள்ளிவாசலின் நேர்த்தியும், அழகும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது.
தொழுகையில் ஈடுபட்ட பொழுது ஜமாஅத் தொழுகை நடாத்திய காரி பிர்தௌஸ் அவர்களின் குரல் வளம், கிறாஅத்தின் அமைதி,தெளிவான உச்சரிப்பு, தனித்துவமான பாணி என்பன தொழுகையை உளப்பூர்வமாகவும், உயிரோட்டமாகவும் மாற்ற துணை புரிந்தது.
எமது நாட்டில் இவ்வாறான குரல் வளத்தைக் கொண்டவர்கள் இருப்பதை அறிந்து உளப் பூரிப்படைந்தோம்.
அல்லாஹ் அவருக்கு சிறந்த கூலியை கொடுப்பானாக.
வளைகுடா நாடுகளில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுவது போன்ற பூரிப்பு எங்களுக்கு ஏற்பட்டிருந்தது.
இதேவேளை அவர்களுடைய நிர்வாக நடவடிக்கைகளை நாங்கள் பார்த்த பொழுது சமூகத்துக்கு தேவையான அடிப்படையில் அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டோம்..
# பள்ளிவாசலின் கதவை தட்டுகின்ற பொழுதெல்லாம் மக்களுக்கு உலர் உணவை வழங்கக்கூடிய அமைப்பில் சிறந்த ஏற்பாடுகள் காணப்பட்டன.
#.ஆடைத் தேவை உள்ளவர்களுக்கு ஆடைகளை கொடுப்பதற்கான வசதிகளும் இருந்தன.
# வைத்திய நலங்களை கவனிப்பதற்கான ஏற்பாடுகள் காணப்பட்டன.
#. online மூலமான குர்ஆன் வகுப்புகளுக்கான ஏற்பாடுகள், மற்றும் கல்வி கற்பதற்காக வசதிகளும் இருந்தன.
#.மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளும் காணப்பட்டன.
#.பெண்களுக்கான தனியான பிரிவும் இருந்தது.
#10 க்கும் உட்பட்ட உத்தியோகத்தர்கள் காரியாலய வேலைகளில் ஈடுபடுவதையும் , பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு வேலைகளில் உள்ளவர்களையும் கண்டு கொண்டோம்.
# வாகனத் தரிப்பிடம் அதனை பாதுகாப்பதற்கான முன் ஏற்பாடுகள் பிரமாதமாக அமைந்தன.
# றமழான் மாதம் என்ற காரணத்தினால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பள்ளிவாசலில் நிறைந்து இருந்ததோடு இளைஞர்கள் தானாக முன்வந்து பல செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது.
மிகவும் கவர்ச்சிகரமான முறையில் சகலருக்கும் ஊக்குவிப்புக்களை அப்பள்ளியின் நிருவாகம் ஏற்பாடு செய்து கொடுப்பதையும் அறிந்து கொண்டோம்.
பள்ளிவாசல் நிருவாக விடயத்தில் ஆளுக்காள் சண்டை பிடித்து இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் நிலையில் மேற்படி இப்பள்ளிவாசலின் செயற்பாடுகள் நாட்டில் உள்ள ஏனைய பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு சிறந்த உதாரணமாக அமையட்டும்.
இப்பள்ளியின் உயர்வில் ஈடுபடும் அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு அல்லாஹ் சிறந்த நற்கூலி கொடுப்பானாக.
எம்.எல்.பைசால் (காஷிபி)
மிகவும் அருமையான பதிவு. இந்த நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பள்ளிவாயல் நிர்வாகிகள் இந்த முன்மாதிரியை வைத்து அவர்களுடைய பள்ளிவாயல்களை மாற்ற முயற்சி செய்தால் இந்த நாட்டில் பஞ்சம் என்பதை முற்றாக ஒழித்து ஒரு உருப்படியான முஸ்லிம் சமூகத்தை உருவாக்க முடியும். இதனைச் சற்று கவனத்தில் எடுத்துக் கொள்வோமா?
ReplyDelete