Header Ads



சர்வதேச லயன்ஸ் கழகத்தின் வலையமைப்பில் இணைந்தது நிந்தவூர் சுப்ரீம்


உலகளாவிய ரீதியில் சமூக சேவையின் முன்னோடிகளான லயன்ஸ் கழகத்தின் இலங்கைக்கான 306 C2 மாவட்டத்தின் கீழ் மிகச்சிறப்பாக இயங்கிவரும் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழத்தின் மூலம் புதிய கழக விரிவு படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. 


இன்நிகழ்வு புதிய கழக உள்வாங்கல் தவிசாளருமான லயன். சாஹிர் அஹமட் அவர்களின் தலைமையில் நிந்தவூர் தோம்புக்கண்டம் விலேஜ் ரெஸொட் இல் கடந்த 07.04.2023 வெள்ளிக்கிழமை அன்று   இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் 306 C2 மாவட்டத்தின் கௌரவ ஆளுணர் லயன். பென்னட் கம்லத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்திருந்தார்கள்.


இந்நிகழ்வில் நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தின் தலைவராக லயன். S. அறூfப் அர்ஷத் அவர்களும் செயலாளராக லயன் MYM. அஸ்லி யூசுfப் மற்றும் பொருளாளராக லயன். A. ரிலா இப்றாஹிம் அவர்களும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர், பிராந்தியத்தில் உள்ள ஏனைய லயன்ஸ் கழக உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர். 


மேலும் இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக நிந்தவூரின் கபடி வீரர் அஸ்லம் சஜா அவர்கள் இலங்கை தேசிய கபடி அணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.


மேலும் உரையாற்றிய நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன். S. அறூப்f அர்ஷத் ஊரில் உள்ள தேவையுள்ள மக்கள் நலனுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை உருவாக்கி செயற்படவுள்ளதாக கூறினார். இதன்போது எமது இளம் தலைமுறையினரை  அதிகமான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பளிப்பதன் மூலம் போதைப்பொருள் மற்றும் எலக்ரோனிக் சாதனங்களுக்கு அடிமையாவதிலிருந்து அவர்களை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவித்தார். மேலும் நிந்தவூர் தள வைத்தியசாலைக்கு தேவையான அத்தியவசிய மருந்துகள் ஒரு தொகையினை விரைவில் வழங்கவுள்ளதாகவும் அறிவித்தார். இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் வேண்டிக்கொண்டார். 

பின்னர் இடம்பெற்ற இப்தார் நிகழ்வுகளுடன்  வைபவம் நிறைவடைந்தது. 


தகவல்:

செயலாளர்,

நிந்தவூர் சுப்ரீம் லயன்ஸ் கழகம்.





No comments

Powered by Blogger.