Header Ads



இஸ்லாத்தில் 4 பெண்களை திருமணம் செய்ய அனுமதித்திருப்பதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்...?


பிரபல பிரிட்டிஷ் பாடகர் "கேட் ஸ்டீவன்ஸ்", பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்று, தனது பெயரை "யூஸுப் இஸ்லாம்" என்று மாற்றிக்கொண்டார், என்பது நாம் யாவரும் அறிந்த விடயம். 1980 களில் அவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தி சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஒரு முறை துருக்கிக்கு அவர் விஜயம் செய்தபோது, ​​துருக்கிய மதசார்பற்ற செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் வழக்கம் போல் ஒரு எரிச்சலூட்டும் ஒரு கேள்வியைக் கேட்டார்: நீங்கள் முன்னேற்றம் கண்ட மேற்கத்திய பாடகர்களில் ஒருவர், நவீன, நாகரீகமான சுழலில் வாழ்ந்தவர் - உங்களால் எப்படி இஸ்லாத்தில் நான்கு பெண்களை திருமணம் செய்ய அனுமதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும்? இதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். 


அதற்கு யூசுப் இஸ்லாம்: நீங்கள் இக்கேள்வியை நான் இஸ்லாத்தை ஏற்க முன்னர் என்னிடம் கேட்டிருக்க வேண்டும்!


இஸ்லாத்தை நான் ஏற்க முன்னர் நான் எத்தனை பெண்களுடன் எப்படியெல்லாம் இருந்தேன் என்று எனக்கு கணக்கு சொல்ல முடியாது. அவர்களால் எத்தனை குழந்தைகள் உருவானது என்றும் கணக்குச் சொல்ல முடியாது. இந்தக் கேள்வியை ஏன் நீங்கள் அப்போது என்னிடம் கேட்டிருக்கக் கூடாது?


இப்போது நான் ஒரு முஸ்லீமாக மாறிவிட்டேன். எனக்கு ஒரு மனைவிதான் இருக்கிறாள், இரண்டாவது திருமண‌ம் முடிக்கும் எண்ணமும் எனக்கில்லை.


இஸ்லாம் நான்கு மனைவிகளை திருமணம் செய்ய அனுமதிக்கிறது என்றால், அதன் அர்த்தம் அவனை அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய பொறுப்பாளராக ஆக்குகிறது என்பதாகும்? என்று பதிலளித்தார். 


✍ தமிழாக்கம் /  imran farook

No comments

Powered by Blogger.