அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து தருமாறு உருக்கம்
பெருநாளுக்கு முதல் நாள் இரவு என்றாலே, எம் ஊரின் நைட் பஜார் கலைகட்டும். வறிய குடும்பம் இனங்கானலின் அடிப்படையில், வந்த தொலைபேசி அழைப்பை உறுதிப்படுத்த நானும், மனைவியும் பசாருக்கு போகும் முன் புத்தளம் - தாயிப் நகரிலுள்ள ஒரு வீட்டிற்கு சென்றோம். திறந்த வெளியில் சிறு குடில் இருளில் மூழ்கியிருந்தது. நிலம் கூட முற்றாக பூசாத வெறும் தரையில் 3 பிள்ளைகள் உறங்கினர். இன்னுமொரு பிள்ளை தொட்டிலில் உறங்கியது.
சதக்காவாக சிலர் கொடுத்த பொருட்களிலிருந்து பலகாரம் செய்துகொண்டிருந்தார் வீட்டுப்பெண்ணின் மாமியார். நானும் என் மனைவியும் ஒருவர் தந்த தகவலின் அடிப்படையில் வந்ததாக அவர்களுக்கு கூறினோம்.
குடும்பத்தினர் வறுமை நிலைமை குறித்து எம்மிடம் கலந்துரையாடினார்.
தாங்கள் மின்சாரம், மலசலகூட வசதி, கணவனின் சிறையில் என்பதால் வாழ்வாதாரமின்றி வாழ்க்கை செலவை கொண்டுசெல்ல இன்னல்படுவதாக எம்மிடம் கூறினார். முடிந்தால் தமக்கு உதவுமாறும், தமது அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து தருமாறும் உருக்கமாக வேண்டினர்.
இதுவரை பல உதவிகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த Jaffna Muslim இணையதளம் ஊடாக உதவிகோரி இதனை எழுதுகிறோம்.
MJF. Jaza
Bank of ceylon - palaviya
Account number 90366596
தொடர்புகளுக்கு 0779697226 ( what's app)
Post a Comment