Header Ads



ஈஸ்டர் தாக்குதலில் என்ன நடந்தது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை


அரசியல் வாதிகள் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு தாங்கள்தான் முதலாளி என நினைப்பதாகத் தெரிகிறது என கொழும்பு, கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.


ஈஸ்டர் தாக்குதல் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை என பேராயர்தெரிவித்தார். நீதிக்காக போராடுவது முக்கியமானது எனவும்  பேராயர் குறிப்பிட்டுள்ளார்.


ஈஸ்டர் தாக்குதலில் என்ன நடந்தது என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை என்றும், மக்கள் பல விஷயங்களைச் சொல்கிறார்கள் என்றும், அதனால்தான் நீதிக்காகப் போராடுவது முக்கியம் என்றும் பேராயர் கூறினார்.


சிலர் மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் இருக்கும் முறையே தொடரட்டும் என்று கூறினாலும் இளைஞர்கள் போராடி இலங்கையின் அரசியல் மாதிரியை மாற்றினார்கள் என்றும் கர்தினால்தெரிவித்தார். ibc

No comments

Powered by Blogger.