Header Ads



கிரேக்கத்தில் தங்கம் வென்ற இலங்கைச் சிறுவன்


கிரேக்கத்தில் நடைபெற்ற உலக பாடசாலை செஸ் போட்டியில் 9 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட தங்கப் பதக்கத்தை கொழும்பு ஆனந்தா கல்லூரியின் ரித்மித தெஹஸ் கிரின்கொட வென்றுள்ளார்.


கிரேக்கத்தின் ரோட்ஸில் கடந்த ஏப்ரல் 14 தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டிக்கு 23 நாடுகளின் 61 பாடசாலை செஸ் வீரர்கள் பங்கேற்றனர்.


ரித்மித தெஹஸ் தாம் பங்கேற்ற 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைப் பெற்று 9 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றார். இந்தப் போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை கசகஸ்தான் நாட்டு வீரர்கள் வென்றனர்.

1 comment:

  1. ஆனந்தாக் கல்லூரி மாணவன் சிறுவன் ரித்மிதவை நாம் வெகுவாகப் பாராட்டுகின்றோம். எங்கள் நாட்டின் பெயரையும், கீர்த்தியையும் மீண்டும் கட்டியெழுப்ப இன்னும் எத்தனையோ ரித்மிதகள் எமக்கு அவசியமாகும். இந்த முன்மாதிரியை வைத்து ஏனைய பாடசாலைகளும் இந்தத் துறையில் முயற்சி செய்தால் அவர்களுக்கும் சாதனையை ஏற்படுத்தலாம்.

    ReplyDelete

Powered by Blogger.