Header Ads



கனடா எல்லையில் பனியில் உறைந்து பலியானவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகின


கனடா - அமெரிக்க எல்லையில் 8 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த இந்தியர்களின் அடையாளங்கள் வெளியாகியுள்ளன.


கடந்த வியாழக்கிழமை, கனடாவின் கியூபெக் மாகாணப்பகுதியில் அமைந்துள்ள St Lawrence நதிக்கரையோரமாக 8 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டவரின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


இவ்வாறு உயிரிழந்தவர்களில், நான்கு பேர் இந்தியாவின் குஜராத்திலுள்ள Manekpur என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) எனவும் இவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்கு சுற்றுலா சென்றதாக இந்தியாவிலிருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட நான்கு பேர் ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina (Monalisa) Zenaida Iordache (28). Florinஇடம் இரண்டு கனேடிய கடவுச்சீட்டுகள் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்தில் இரண்டு வயது குழந்தை, மற்றும் ஒரு வயது குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் இவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.



No comments

Powered by Blogger.