Header Ads



சஹ்ரானின் தொலைபேசியை வெளிநாட்டுக்கு கொடுத்தது யார்..? குளித்து சோப்பு போட்டு நன்றாக இருகிறார்கள்


 சஹ்ரானின் கையடக்க தொலைபேசியின் தரவுகள் வெளிநாட்டில் உள்ள புலனாய்வு அமைப்பிற்கு கொண்டு செல்ல அனுமதியளித்தமை ஏன் என்பது புதிராக உள்ளதாகவும், இந்த தாக்குதல் தொடர்பாக பல இரகசிய தகவல்கள் உள்ளடங்கி இருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


கொழும்பில் நேற்று (25.04.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளார்.


தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா, இஸ்ரேல் ஆகிய உலகில் உள்ள தலைசிறந்த புலனாய்வு அமைப்புகள் பல இந்நாட்டிற்கு வந்தன.


அப்போது சஹ்ரானின் கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகளை ஒரு குறிப்பிட்ட புலனாய்வு துறைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது யார்? 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை முதலில் கத்தோலிக்க திருச்சபையிடம் கொடுத்துவிட்டு நாடாளுமன்றத்தில் கொடுங்கள்.


வெடிகுண்டு வீசியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்கு தொடருங்கள். நேற்று ஒரு கும்பல் தெருக்களில் கூச்சலிட்டது. ஆனால் வெடிகுண்டு வீசியவர்கள் பற்றி எதுவும் கூறப்படவில்லை.   குளித்துவிட்டு சோப்பு போட்டு அவர்கள் நன்றாக இருகிறார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 


2019 மே 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் இடம்பெற்று வருகின்ற போதிலும், கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், தன்னை'சிறையில் அடைக்க அல்லது குற்றவாளியாக அடையாளப்படுத்த' விரும்புவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.