Header Ads



மஞ்சளின் விலையும் குறைந்தது


நாட்டில் தற்போது ஒரு கிலோ பச்சை மஞ்சள் மொத்த விற்பனை விலை 50 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நாட்களில் மொத்த சந்தையில் பச்சை மஞ்சள் கிலோ 50 ரூபாய்க்கும், சில்லறை விலை கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


மேலும் மஞ்சள் விளைவிற்பதில் வெற்றிகரமான வருமானம் பெற முடியாத நிலை இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.


அதேவேளை, பச்சை மஞ்சளின் விலை குறைந்தாலும், சில தனியார் நிறுவனங்கள், ஒரு கிலோ மஞ்சள் தூளை, 3,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சை மஞ்சள் விலை சுமார் 1000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.