76 இலங்கை பெண்கள், ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சமடைவு
ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் 36 பேர் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு சென்று பணிபுரிந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா கூறினார்.
இதேவேளை, பணியகத்தில் பதிவு செய்யாது, வௌிநாட்டில் தொழில் வாய்ப்புகளுக்காக செல்வோருக்கு, எதிர்வரும் காலத்தில் பாதுகாப்பு இல்லத்தில் தஞ்சம் வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாது தொழில் வாய்ப்பிற்கு செல்வது, நாட்டின் சட்டங்களை மீறும் செயலாகும்.
Post a Comment