Header Ads



இன்று மேலும் 14 மெட்ரிக்தொன் பேரீத்தம் பழங்களை சவுதி வழங்கியது - 5 மாவட்டங்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும்



 சவுதி அரசால் இலங்கையின் சவுதி தூதரகம் மூலம் 50 மெட்ரிக் தொன்கள் பேரீத்தம் பழங்கள் எமது திணைக்களத்திற்கு வழங்கப்பட்டன. ஏற்கனவே குறிப்பிட்ட 36 தொன்களிற்கு மேலதிகமாக 13.04.2023 திகதி  மேலும் 14 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களை சவுதி தூதரகம் வழங்கியது. 


இப் பேரீத்தம் பழங்களை கொண்டு செல்வதற்கான  போக்குவரத்து பிரச்சினை மற்றும் நோன்பின் இறுதிக் காலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு  அவற்றை கொழும்பு மாவட்டத்தினை அண்மித்த மாவட்டங்களான கம்பஹா, களுத்துறை, காலி, புத்தளம் மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விநியோகிப்பது என தீர்மானிக்கப்பட்டு போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து செலவுகள் தூதரகத்தின் உதவியுடன் தற்போது விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அத்தோடு மேற்கூறிய 50 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களுக்கு மேலதிகமாக 15 இற்கும் அதிகமான மெட்ரிக் தொன்கள் அளவில் சவுதி தூதரகத்தின் மூலம் நேரடியாக இலங்கையிலுள்ள பள்ளிவாசல்கள், அரபு மத்ரஸாக்கள், அமைப்புகள், சிறைச்சாலைகள், பாடசாலைகள் போன்றவைகளிற்கும் வழங்கபட்டுள்ளது.


மேற்படி எமது நாட்டிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பேரீத்தம் பழங்களை தந்து உதவிய சவுதி அரசாங்கத்திற்கும், தற்போதைய தூதுவர்  Ambassador Khalid Hamoud Alkahtani, Royal Embassy of Saudi Arabia, Colombo  மற்றும் அதன் உத்தியோகத்தர்களிற்கும் இலங்கை அரசு, எமது அமைச்சு,எமது திணைக்களம் மற்றும்   முஸ்லிம் மக்கள் சார்பான நன்றிகளையும் பிரார்த்தனை களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பணிப்பாளர்

முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

14.04.2023


No comments

Powered by Blogger.