Header Ads



வாகன அணிவகுப்பில் விபத்து – மாணவர்கள் இருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்


பாடசாலை கிரிக்கெட் போட்டியின் (Big Match) போது, ​​இடம்பெற்ற வாகன அணிவகுப்பில் ஏற்பட்ட விபத்தில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.


ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


காயமடைந்த மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் விழியிலே இவ் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.