Header Ads



புத்தளத்தில் திரண்ட இளைஞர்கள், சந்தியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம், 2 கிழமை அவகாசம் கேட்ட பொலிஸ் அதிகாரி


புத்தளம் கரம்பை உலுக்காப்பள்ளம் பகுதியில் போதை வியாபாரிகளுக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் இடையில் கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து போதை வியாபாரத்தை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் போதை வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


புத்தளம் கரம்பை உலுக்காப்பள்ளம் கிராமத்தில் அதிகரித்து வரும் போதை வியாபாரத்தை நிறுத்துமாரு கோரி அப்பகுதி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


போதைப் பொருளை விற்பனை செய்யவண்டாமென்று தெரிவித்த இளைஞர்கள் மீது போதை வியாபாரிகள் நேற்று இரவு தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி இளைஞர்களும் போதை வியாபாரிகளைத் தாக்கியுள்ளனர். இதன்போது போதை வியாபாரிகளுக்கும் அப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்மக்கள் ஒன்று திரண்டு போதை வியாபாரத்தை நிறுத்துமாறு கோரி கரம்பை உடப்பு சந்தியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்று போதை வியாபரியின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இதனையடுத்து அவ்விடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சிவில் உடையில் வருகைத் தந்திருந்தார்.


இதன்போது அப்பகுதி மக்களுடன் பொலிஸ் அதிகாரி இரண்டு கிழமைகக்குள் போதை வியாபாரத்தை அவ்விடத்திலிருந்து நிறுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.


அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுவிட்டு அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளனர்.


(வீரகேசரி)

1 comment:

  1. "இதன்போது அப்பகுதி மக்களுடன் பொலிஸ் அதிகாரி இரண்டு கிழமைகக்குள் போதை வியாபாரத்தை அவ்விடத்திலிருந்து நிறுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்." Hahaa, pothai viyaapaaraththukku enna oru salukai !!!! 2 weeks kaanumaa . Eiiiiiiiiii !!!!

    ReplyDelete

Powered by Blogger.