Header Ads



டொலர் ஒன்றின் பெறுமதி 236.81 ரூபாவா..? நிகழ்ந்தது என்ன..??

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் ( 31 ) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியும் , கூகுள் வெளியிட்டுள்ள இலங்கை ரூபாயின் பெறுமதியும் முரணானதாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது . . 


இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318.27 ஆகவும் , விற்பனை பெறுமதி 336 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது . எனினும் , அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி கூகுளில் 236.81 ரூபாயாக காட்டுகின்றது . இது சுமார் 82 ரூபாய் வித்தியாசமாக உள்ளது . 


இதுவரை இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலருக்கு எதிரான ரூபாய் பெறுமதியும் , கூகுள் தரவும் சமமாக இருந்த நிலையில் , இன்று வித்தியாசமாக காணப்படுகின்றது . இதற்கான காரணம் என்ன என்று அனைவர் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளது . இதேவேளை , பங்கு பரிவர்த்தனையிலும் டொலரின் பெறுமதி 326 ரூபாயாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது . எனினும் தற்போது கூகுளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 329 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது . 


No comments

Powered by Blogger.