Header Ads



நீதிமன்றத்தை அவமதித்த நிதியமைச்சின் செயலாளரை தண்டியுங்கள் - SJB, JVP உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்


நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவை தண்டிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாமல் செயற்பட்டதால் நீதிமன்றத்தை அவமதித்ததாக தீர்ப்பளிக்க வேண்டும் என குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


2


உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி, நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.


மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பான நிதியை முடக்குவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நிறைவேற்ற நிதியமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.