Header Ads



பிரபாகரனதும், அவரது குடும்பத்தினதும் நிலை - Erik Solheim தெரிவித்துள்ள தகவல்


புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக, ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சோல்ஹிம் தெரிவித்துள்ளார்.


இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தன.


இலங்கையில் நடந்த மிகவும் சோகமான போரின் ஒரு பகுதியாக பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மொத்த குடும்பத்துடன் இறந்துவிட்டார்.


தற்போது பிரபாகரன் உயிருடன் இல்லை. இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கத்திற்கு இடையேயான சமாதானப் பேச்சு வார்த்தையின் போது நான் பிரபாகரனை பலமுறை சந்தித்திருக்கிறேன்.


பிரபாகரன் இறந்துவிட்டார், அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டனர். அது மிகவும் சோகமான நிகழ்வு. தற்போது இலங்கை எதிர்காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.


சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றாக இணைந்து வாழ விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் - இலங்கை அரசாங்கத்திற்கு இடையே போர் நடைபெற்ற காலத்தில் எரிக் சோல்ஹிம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  TW

1 comment:

  1. 1976 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பாக மாறுவதற்கு எரிக்சொல்ஹீமும் நோர்வேயும் உதவினர். 30 வருட ஆயுதப் போராட்டத்தில் பல தமிழர்கள் கொல்லப்பட்டதாக எரிக்சொல்ஹீம் கூறுவது தவறு. அன்றைய காலகட்டத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர்.
    எனது அறிக்கையை பகிரங்கமாக மறுக்க முடியுமா என எரிக்சோல்ஹீமுக்கு சவால் விடுகிறேன்.

    English:
    Eriksolhiem and Norway helped the LTTE Tigers to become the ruthless terrorist organization since it was set-up in 1976. Eriksolhiem is wrong to say many Tamilsdieded during the 30 years armed struggle. many Sinhalease anf Muslims too were killed duringthat time.
    I challenge Eriksolhiem to deny my statement if he can publicly.

    Norwegian:
    Eriksolhiem og Norge har hjulpet LTTE Tigers til å bli den hensynsløse terrororganisasjonen siden den ble opprettet i 1976. Eriksolhiem er feil å si at mange tamiler døde i løpet av den 30-årige væpnede kampen. mange singalesiske og muslimer ble også drept i løpet av den tiden.
    Jeg utfordrer Eriksolhiem til å nekte uttalelsen min hvis han kan offentlig.

    Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, NORAD-Fellow(1971-77), Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.