Header Ads



மொரோக்கோவிற்கு முழு உதவிகளை வழங்குவதாக அரபு நாடுகள் அறிவிப்பு


மொரோக்கோவில் உள்நாட்டு போரை உருவாக்கத் துடிக்கும் ஈரானுக்கு எதிராக மொரோக்கோவிற்கு முழுமையான உதவிகளை வழங்குவதாக அரபு நாடுகள் அறிவிப்பு.


மொரோக்கோவின்  உள்ளக விவகாரங்களில் தலையிட்டு உள்நாட்டு யுத்தத்தை உருவாக்க முனையும் ஈரான் மற்றும் லெபனானை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அதன் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தங்களின் முழுமையான ஆதரவை தருவதாகவும் அதை மீண்டும் ஒரு தடவை புதிப்பிப்பதாகவும் ஈரானின் நகர்வுகள் விடயத்தில் கவனம் செலுத்தும் நான்கு அரபு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


சென்ற புதன் கிழமை (08.03.2023) எகிப்தின் தலை நகர் கெய்ரோவில் நான்கு அரபு நாடுகளின் அமைச்சர்களின் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது இதில் மொரோக்கோவின் உள்ளக விவாகரங்களில் ஈரானும் அதன் பங்காளியான ஹிஸ்புல்லாவும் தலையிடுவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும் அவ்வறிக்கையில்  மொரோக்கோவில் இயங்கிவரும் ‘‘போலிசாரியோ’’  எனும் கிளர்ச்சிக்குழுவுக்கு ஈரான் இரானுவப் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்குவது மொரோக்கோவின் ஆள்புலப்பிரதேசத்தின் ஒருமைப்பாடு அதன் பாதுகாப்பு இஸ்தீரத்தன்மை என்பவற்றைப் பாதிப்பதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் அரபுப் பிராந்தியத்தின் அமைதியைக் குழைத்தல் இஸ்தீரத் தன்மையை இல்லாமலாக்குதல் என்பவற்றுக்காக முன்னெடுக்கப்படும் ஈரானின் தொடர்ச்சியான செயற்பாட்டின் ஓர் அங்கமாகவே ஆபத்தான நிராகரிக்கத்தக்க இச்செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக யெமனின் கிளர்ச்சிக் குழுவாகிய ஹுஸிய்யீன்களுக்கு ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவினால் இரானுவப் பயிற்சிகள், ஆயுதங்கள் வழங்கப்பட்டு தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் இன்னும் முடிவுராத நிலையில் தொடர்வதும் யெமன் முழுமையாக அழிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். 


அரபு நாடுகள் ஒருங்கினைப்பு அமைப்பின் வெளிவிவாக அமைச்சர்களுக்கு மத்தியில் நடைபெற்ற 159ஆவது கூட்டத்தொடரின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இச்சந்திப்பில் ஸவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய உறுப்பு நாடுகளுடன் அரபு நாடுகள் ஒருங்கிணைப்பு அமைப்பின் பொதுச் செயலாளரும் கலந்துகொண்டார்.


அரபு நாடுகளில் குழுச் சண்டைகள் கிளர்ச்சிகளை உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் ஈரானின் தொடர்ச்சியான நகர்வுகள் தொடர்பில் தங்களது ஆள்ந்த கவலையையும் அச்சத்தையும் தெரிவிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் ஈரான் சில அரபு நாடுகளில் தீவிரவாதக் குழுக்களை உருவாக்குவதும் அவைகளுக்கு ஆயுதங்களையும் இரானுவப் பயிற்சிகளை வழங்கி உதவிகளைப் புரிவதும் பிரச்சினைகளையும் பிழவுகளையும் உருவாக்குவதோடு அரபு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் இஸ்தீரத் தன்மைக்கும் ஆபத்தாக அமைந்துள்ளது, இதனால் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியான பிரச்சினைகளை சமாதான வழியில் தீர்த்துக்கொள்வதில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.