அனைத்து எஞ்ஜின்களும் இயங்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்
நாடு முழுவதும் கடுமையான அசாதாரண நிலைமை ஏற்பட்ட போது நாட்டின் அதிகாரத்தை பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள்,ஜனசவிய போன்ற பொது நலன்த்திட்டங்களையும் ஆடைத் தொழிற்சாலைகள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்த தரப்புமோ ஜனசவிய போன்றவற்றை குறைப்புச் செய்யுமாறு எதுவும் கோரப்படவில்லை என்றும்,நாற்பத்து மூன்று இலட்சம் பிள்ளைகளுக்குக் கொடுத்த மதிய உணவை குறைக்குமாறு கோரவில்லை என்றும்,சீருடைகளை வழங்குவதை தடை செய்யுமாறு கோரவில்லை எனவும் எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான சரியான பேச்சுவார்தைகளே அதற்குக் காரணம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று அது முறையாக நடக்காததுதான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக மின்கட்டணத்தை செலுத்தாத நிலைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment