Header Ads



மீண்டும் இடம் பிடித்த ரொனால்டோ


போர்ச்சுகல் தேசிய அணியில் ரொனால்டோ மீண்டும் இடம் பிடித்துள்ளார்.


ரொனால்டோவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த, கத்தார் உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி விளையாடிய 2 நாக்அவுட் போட்டிகளிலும் அவர் தொடக்கத்திலேயே களமிறங்க அப்போதைய பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் வாய்ப்பு அளிக்கவில்லை.


இதனால், 35 வயதை எட்டிவிட்ட ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே நிபுணர்கள் பலரும் கணித்தனர்.


ஆனால், போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள ரொபர்டோ மார்டினெஸ் அந்தக் கணிப்புகளை பொய்யாக்கியுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டிக்கான போர்ச்சுகல் தேசிய அணியில் ரொனால்டோவுக்கு அவர் வாய்ப்பளித்துள்ளார்.


போர்ச்சுகல் தேசிய அணியில் இடம் பிடித்ததன் மூலம் சர்வதேச கால்பந்து வாழ்க்கையைத் தொடரவுள்ள ரொனால்டோ, எதிர்வரும் வியாழக்கிழமையன்று (மார்ச் 23) லிச்டென்ஸ்டெய்ன் அணிக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்கிறார்.


சர்வதேச கால்பந்தில் 196 போட்டிகளில் 118 கோல்களை அடித்து அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனை சிகரத்தில் அமர்ந்துள்ள ரொனால்டோ, தனது கோல் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

No comments

Powered by Blogger.