Header Ads



டிக்டொக் நிறுவனரை கேள்விகளால் திணறடித்த அமெரிக்க பாராளுமன்றமும், அவரது குழந்தைகள் பற்றி கண்டறிந்த முக்கிய விசயமும்...!



அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரபல சமூக ஊடகத் தளமான டிக் டொக்கின் நிறுவனரைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.


டிக்டொக் நிறுவனர் சியூ ஷோ சி இடம் சுமார் 5 மணி நேரத்துக்குக் காரசாரமான கேள்விகள் எழுப்பப்பட்டன.


சீனாவுக்குச் சொந்தமான அந்தச் செயலி சீனாவிலிருந்து பிரிந்து தனியாகச் செயல்பட வேண்டும் அல்லது தடை செய்யப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ஒருசேரக் கூறினர்.


டிக்டொக் செயலி பிள்ளைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் கருத்துகளைப் பரப்புவதாகவும் சீனாவின் கம்யூனிசக் கட்சியுடன் அதற்குத் தொடர்புள்ளதாகவும் அவர்கள் சாடினர்.


இந்த விசாரணையின் ஒரு கட்டத்தில் ஜனநாயக கட்சியின் கொங்கிரஸ் பிரதிநிதி நானிட்டி பிரகான் சியூவிடம், உங்களது சொந்தக் குழந்தைகள் டிக்டொக் பயன்படுத்துகிறார்களா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு அவர், அவர்கள் பயன்படுத்தவில்லை, ஏனென்றால் அவர்கள் சிங்கப்பூரிலேயே வாழ்கிறார்கள். அந்த நாட்டில் 13 வயதுக்கு குறைவானவர்கள் இவ்வாறான செயலியை பயன்படுத்த அனுமதி இல்லை என்றார்.


எனினும் தமது குழந்தைகள் சீனாவில் இருந்தால் இந்த செயலியை பயன்படுத்த அனுமதிப்பேன் என்றும் தெரிவித்தார்.


சீனாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கும் செயலிக்கும் தொடர்புள்ளதா என்பது அதிகம் விசாரிக்கப்பட்டது.


சீனாவில் உள்ள பைட்டான்ஸ் நிறுவன ஊழியர்களால் டிக்டொக் பயனீட்டாளர்களின் விபரங்களைப் பெற முடியும் என்று சியூ குறிப்பிட்டார்.


இருப்பினும், அமெரிக்கப் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விபரங்களை அமெரிக்காவிலேயே வைத்திருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அவர் கூறினார்.


டிக்டொக் நிறுவனத்தின் மிகப் பெரிய சந்தை அமெரிக்காவிலேயே உள்ளது.


அங்கு மாதந்தோறும் சுமார் 150 மில்லியன் பேர் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

No comments

Powered by Blogger.