Header Ads



பூரணை நாட்களிலும் மது விற்பனைக்கு யோசனை முன்மொழிந்துள்ள டயானா எம்.பி.


பூரணை நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்துள்ளதுடன், அந்த நாளில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார். 


இராஜாங்க அமைச்சரின் யோசனை அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகவும் பூரணை நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


மதுபானசாலைகளை 24 மணி நேரமும் திறக்க வேண்டும் என்று முன்னர் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இலங்கையில் இந்தப் பெண்ணின் இருப்பே கேள்விக்குரியது. இந்தப் பெண்ணுக்கு பாராளுமன்றத்தில் பிரிட்டிஷ் குடியுரிமையுடைய பெண் என்றபடியால் பாராளுமன்றத்திலோ, மந்திரி சபையிலோ அங்கம் வகிக்கமுடியாது. மேலும் ரணிலின் மடியில் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்ணுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைளும் எடுக்கப்படமாட்டாது. மத்திய வங்கி கள்ள விவகாரமும் இந்தப் பிரச்சினையும் ரணில் இருக்கும் வரை அவற்றுக்கு தீர்வு கிடையாது. இனி செய்யவேண்டியது ஒன்றுதான். உல்லாசப்பிரயாணத்துறை இராஜாங்க அமைச்சர் என்ற பதவியுடன் மதுபான விபசார,சூது,களியட்டத்துறை அமைச்சராக நியமித்தால் நாடு சிறப்பாக, வளங்கொழித்துக் கொண்டு சிங்கப்பூரைவிட சிறந்த ஒரு ஆசிய நாடாக முன்னேறும். அது தான் இப்போது செய்யவேண்டியது.

    ReplyDelete

Powered by Blogger.