Header Ads



"ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் ரணிலுக்கே வெற்றி"


நாளையே நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அப்போதும் வெற்றி பெறுவார் என, அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


வேண்டுமென்றால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மட்டும் மாற்றம் ஏற்படலாம். ஜனாதிபதியாக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே மக்களால் தெரிவு செய்யப்படுவார் எனவும், அவர் தெரிவித்தார்.


எரிபொருள், எரிவாயு, மருந்துத் தட்டுப்பாடு, பால்மாத் தட்டுப்பாடு, 13 மணிநேர மின் துண்டிப்பு என அந்தக் கஷ்ட காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனாதிபதி சிறந்ததொரு நிலையை தற்போது நாட்டில் ஏற்படுத்தியுள்ளார் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.


தனி மனிதனாக இருந்துகொண்டு பாராளுமன்றத்திலும் தனக்கான பலத்தை ஏற்படுத்தி நாட்டை ஏதோவொரு வகையில் முன்னேற்றப் பாதைக்கு ஜனாதிபதி கொண்டு செல்கின்றார். நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியதும் எந்த தேர்தலையும் நடத்தலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று சர்வஜன வாக்குரிமை மீதான சபை ஒத்திவைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 


லோரன்ஸ் செல்வநாயகம்

1 comment:

  1. மிகவும் பரந்த அரசியல் அனுபவமுடைய 'ஜீவன் தொண்டமானுக்கு அடுத்த பிரதமர் பதவி கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. அவ்வளவு அழகாக சனாதிபதியை பாராட்டி புகழ்ந்துள்ளார். அதற்கு உரிய பரிசு அவருக்குக் கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.