Header Ads



சவூதியின் மனிதாபிமானம் - இலங்கைக்கு தொன் கணக்கான பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு


50 தொன் எடைகொண்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு, சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.


இந்த அன்பளிப்பு சவூதி அரேபிய மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் (16.03.2023) கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி குறித்த பேரீச்சம்பழ தொகையை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்துள்ளார்.


இலங்கையின் சார்பில் புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அதனைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


சவூதி அரேபிய அரசாங்கம் வருடாந்தம் ரமழான் காலத்தை முன்னிட்டு பெருந்தொகை பேரீச்சம்பழங்களை இலங்கைக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இந்த அன்பளிப்பில் மனிதமோ மனிதாபிமானமோ இல்லை. கடந்த 35 வருடங்களாக சவூதி அரேபியா அரசாங்கம் உலகில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு நோன்பை முன்னிட்டு அன்பளிப்பாக வழங்கும் ஒரு நடைமுறையாகும். கடந்த 30 வருடங்களாக 200 மெற்றிக் டொன் பேரீச்சம் பழம் இலங்கைக்குத் தொடர்நது கிடைத்தது. கோவிட் தொற்று காரணமாக அந்த வருடம் எந்த ஒரு நாட்டுக்கும் இதனை வழங்கவில்லை. தற்போது வழமையாக சவூதி அரசின் இந்த சேவை தொடர்கிறது. ஆனால் துரதிருஷ்வசமாக இலங்கை முஸ்லிம்களுக்கு நோன்பு திறக்க அனுப்பும் இந்த பேரீசசம் பழம் கடந்த காலங்களில் பாராளுமன்றம் உற்பட வர்த்தக அமைச்சு கலாசார அமைச்சு அங்கு பணியாற்றும் அத்தனை ஊழியர்களுக்கும் பகிரப்பட்டது. படிப்படியாக 150 முதல் 400 அல்லது ஐனூறு கிலோக்கள் அனுப்பப்படும் பள்ளிவாயல்களுக்கு படிப்படியாகக் குறைந்து 300 -400 கிலோ தேவைப்படும் பள்ளிவாயல்களுக்கு 25 அலலது 30 கிலோக்களை அனுப்பிவிட்டு கைகநழுவினார்கள். இந்த ஊழலுக்கும் களவுக்கும் பின்னால் முஸ்லிம் கலாசார திணைக்களம் இருக்கின்றதா அல்லது யார் இந்த ஊழலை முன்கொண்டு சென்றனர் என்பது பொதுமக்களுக்குத் தெரியாது. படிப்படியாக அந்த பேரீத்தம்பழங்களை பொதுமக்கள் மறந்து விட்டார்கள். எல்லாத்துறைகளிலும் ஊழலும் களவும் மலிந்து விட்டதால் முஸ்லிம்களின் சொத்து இவ்வாறு களவாடப்படுகின்றது. தற்போது முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் சிறந்த ஒருநிர்வாகி, பணிப்பாளராக பதவியேற்றுள்ளமையால் இம்முறை இந்த ஊழல் நடைபெறாது என நாம் எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.