Header Ads



நீதிபதிகளை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் அரசாங்கம்


தேர்தலுக்கு நாடாளுமன்றம் ஒதுக்கிய நிதியை அவ்வாறே வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தாலும்,உயர் நீதிமன்ற நீதிபதிகளை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்படுவதாகவும், பக்கச்சார்பற்ற நீதித்துறை மற்றும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக தமது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி ஜனநாயக தேர்தல் முறைக்கு இடையூறு விளைவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக செயல்முறையை பாதுகாக்க நிறைவேற்று, சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை என்பன செயல்பட்டாலும், நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு உரிய இடைக்கால உத்தரவை வழங்குமாறு நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு உயர் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அண்மைய தகவல்களின் படி அறியக்கிடைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


சிறப்புரிமைக் குழு உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைக் கோருவதன் மூலம் நீதித்துறையில் நேரடியான பாரிய செல்வாக்கைச் செலுத்துவதாகவும், இது நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை நகைப்புக்கிடமாக்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


சட்டமன்றத்தில் நிறைவேற்று அதிகாரத்தின் செல்வாக்கு மூலம் நாடாளுமன்றத்தில் நீதித்துறைக்கு இவ்வாறு விரல்நீட்ட எண்ணுவதாக இருந்தால், இதன் மூலம் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விடும் எனவும், இது இந்நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பின் செல்லுபடித்தன்மையை கடுமையாகப் பாதிக்கும் எனவும்,இதன் மூலம் எமது நாடு ஓர் ஜனநாயக நாடாக இன்றி சர்வாதிகார நிறைவேற்று அதிகாரத்தின் செயற்பாட்டிற்கு உட்பட்ட நாடாக மாறும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதியில் (16) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.