Header Ads



390 மில்லியன் டொலர்கள் முதலில் கிடைக்கிறது, நெருக்கடி தீர்க்கப்பட்டு, அந்நியச் செலாவணி வந்து விட்டது


கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அத்தியாவசியத் துறைகளுக்கு போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.


மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புப் பொதியின் வரவிருக்கும் ஒப்புதல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் அதேவேளை நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .


ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில், கலாநிதி வீரசிங்க, IMF வாரியம் நாளை (திங்கட்கிழமை) இலங்கைக்கான கடனை முறைப்படி அங்கீகரிக்க உள்ளதாகவும் கிட்டத்தட்ட 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் தவணை யாக வழங்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். TKural

1 comment:

  1. இவருடைய பேச்சைப் பார்க்கும் போது மரத்தில் உள்ள குருவியை கற்பனையில் கூட்டில் அடைப்பது போல் தெரிகிறது. சனாதிபதியின் திட்டங்களுக்கு பசளையிடும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. உண்மையான செயல்பாடு எவ்வாறிருக்கும் என்பது போகப் போக மக்களுக்கு விளங்கவரும்.

    ReplyDelete

Powered by Blogger.