ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்களே - மரிக்கார் Mp
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும் போது நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டு வருவதற்கான பின்னணியை உருவாக்குவதாகவும், அந்த திறமை கொண்ட குழு ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி இன்று அக்கிராசன உரை நிகழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்கிராசன உரை நிகழ்த்தும் ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் கடந்த விட்டன. ஆனால் ஓராண்டுக்குள் சகல பிரச்சினைகளையும் முடிப்பதாகவும் சர்வதேச ஆதரவு தனக்கு உண்டு எனவுமே அவர் தெரிவித்திருந்தார். ஆனால் வட்டி விகிதம் மேலும் மேலும் அதிகரித்துள்ளது. வருமானம் குறைந்து வரி விதிப்பு அதிகரித்துள்ளது, வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது, பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன, பணவீக்கம் அதிகரித்துள்ளது.
அடுத்ததாக இந்நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விட்டு இரண்டாயிரம் இலட்சம் செலவு செய்து சுதந்திர தினம் கொண்டாடி விட்டு, நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்கிறார்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கு காரணம் சொல்லாதீர்கள்.அப்படி நடந்தால் தெருவுக்கு தெரு,சந்திக்கு சந்தி,வீதிக்கு வீதி கலவரம் நடக்கும்.இந்த பொய்யான வார்த்தைகளால் மக்களை பயமுறுத்த நீங்கள் தயாராக இருந்தாலும்,நாங்கள் பயப்பட மாட்டோம்.
எனவே,சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்,அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும், அதனால்தான் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை தெளிவாக கூற வேண்டும்.
இலங்கை நீதிமன்றங்கள் தேர்தலை ஒத்திவைக்க ஒருபோதும் தீர்ப்பளிக்கவில்லை,எனவே விக்கிரமசிங்க அவர்களே, உங்கள் கனவு நனவாகாது.
Post a Comment