Header Ads



இலங்கையில் அதிசயமான கிராமம்..! என்ன மொழி பேசுகிறார்கள் தெரியுமா..?

கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில், தெலுங்கு பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றமை தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.


இலங்கையில் அமைந்துள்ள பல கிராமங்கள் வெளி உலகத்திற்கு தெரியாமலும், கவனிக்கப்படாத ஓர் சமூகமாகவும் காணப்படுகின்றன.


அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் ஆழையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அளிக்கம்பை, கஞ்சிகுடியாறு கிராமத்தை குறிப்பிடலாம்.கஞ்சிகுடியாறு கிராமம், உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட கிராமமாகும்.


ஆழையடிவேம்பு பகுதியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் குறித்த கிராம மக்கள் கவனிப்பாரற்று வாழ்ந்து வருகிறார்கள்.


அளிக்கம்பை, கஞ்சிகுடியாறு கிராம மக்கள் தாய்மொழியாக தெலுங்கு மொழியை பேசிவந்தாலும், தழிழ் மொழியையும் அவர்கள் சரளமாக பேச பேசி வருகின்றனர்.


இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இரண்டாம் ராஜசிங்க மன்னர் வந்த காலப் பகுதியில், இந்த இனத்தவர்கள் இலங்கைக்கு வந்ததாக நம்பப்படுவதுடன், இவர்கள் இலங்கைக்கு நேரடியாக வந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.


பார்க்கும் இடம்மெல்லாம் பசுமையாய் காட்சி தரும் குறித்த அழகிய கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாத நிலையில், மிகவும் வறுமை கோட்டில் வாழ்ந்து வருகின்றனர்.


அதாவது, கல்வி, மருத்துவம், குடிநீர், உரிய வீட்டுத் திட்டங்கள், போக்குவரத்து இதுபோன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு நிலையிலேயே, இந்த மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.


இவர்களின் பிரதான தொழிலாக சேனைப் பயிர்ச் செய்கை மற்றும் கால்நடைகளை வளர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் பலர் யாசகம் எடுப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.


இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இந்த மக்கள் இன்று, இந்தக் கிராமத்தில் பலர் சிறந்த கல்வி அறிவுள்ளவர்களாகவும், லண்டன், கனடா போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் உயர் பதவி வகித்து வருவதாகவும் மேலும், பலர் பல்கலைக்கழகங்களுக்கு சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


இவர்களுடைய கலாசரம், மொழி மற்றும் வாழ்வியல் முறைமை போன்ற பல விடயங்களை அறிந்து சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.    TW

No comments

Powered by Blogger.