Header Ads



மஹிந்தவின் ஆசை நிறைவேறுமா...?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குழுவொன்று ஆலோசனைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.


இந்த நிலையில், குறித்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வார இறுதி பத்திரிகைக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


பொதுஜன முன்னணியில் தான் ஒரு கட்சித் தலைவர் என்றும், எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலை வணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


எவ்வாறாயினும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருவதாகவும், அவரை பதவியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


1 comment:

  1. ஆம் இவர் பிரதமராவது மட்டும்தான் இப்போதுள்ள குறை. மற்ற அனைத்தும் நிறைவு பெற்றுவி்ட்டது. அவரைப் பிரதமராக்குங்கள். வௌிநாட்டு உதவிகள் வந்து குவியும். பொருளாதாரம் சிங்கப்பூரின் பொருளாதாரத்தை விஞ்சிவிடும். இனி சிங்கப்பூர் மக்கள் தொழில் செய்ய இங்கு வருவார்கள். ஏனெனில் இப்போது பிரதமர் மஹிந்த விக்ரமசிங்க.

    ReplyDelete

Powered by Blogger.