“நான் உங்களுக்கு அடிமையாக இருப்பேன்” - “இல்லை, இல்லை”
வடக்கு சிரியாவில் தனது வீட்டின் கொங்கிறீட் சுவருக்குக் கீழ் சிக்கி இருந்த இரு சிறுவர்கள் 36 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.
“என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள். நான் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்கிறேன்” என்று அதில் மூத்த சிறுமி மீட்பாளர்களை பார்த்து கூறுவது வீடியோவில் பார்க்க முடிகிறது.
“நான் உங்கள் அடிமையாக இருப்பேன்” என்று அந்த சிறுமி கூறும்போது, மீட்பாளர் ஒருவர், “இல்லை, இல்லை” என்று பதிலளிக்கிறார்.
மரியம் என்ற அந்த சிறுமி அருகில் சிக்கி இருக்கும் தனது இளைய சகோதரரின் தலையை மெதுவாகத் தடவுகிறாள். இருவரும் படுக்கையில் இருக்கும்போதே சுவர் விழுந்து சிக்கியுள்ளனர்.
இவர்களின் பெற்றோர்கள் பூகம்பத்தில் இருந்து உயிர் தப்பிய நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்தக் குடும்பத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
Post a Comment