மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்படும் - சஜித்
இதன் பிரகாரம்,நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை நாட்டிற்கு பணமில்லை என்பதால் வங்குரோத்தாகுவது எனவும்,அதில் இருந்துதான் ஒவ்வொரு பிரச்சினையும் எழுவதாகவும்,வங்குரோத்தாகி கிடக்கும் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கான பணத்தை பெறக்கூடிய அரசாட்சி ஒன்று தான் இதற்கான தீர்வு எனவும், அவ்வாறான ஆட்சியின் ஊடாக பணப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை சுருங்கச் செய்வதே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்று தற்போதைய அரசாங்கம் நினைப்பதாகவும்,இதற்காக வட்டி விகிதங்கள் 30-35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது தேவையைக் குறைத்து,உற்பத்தியைக் குறைத்து, வருமானத்தைக் குறைத்து வேலையின்மையை அதிகரிக்கும் எனவும், சிறு பொருளாதாரத்தை சுருக்கி,நிகர பொருளாதாரமும் சுருங்கும் செயற்பாடே இதில் இடம் பெறுவதாகவும், இதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்வு தகர்ந்து போகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலை மாற வேண்டும் என்றும்,மக்களை கஷ்டப்படுத்துவதன் மூலம் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் கஷ்டப்படும் போது யானை-மொட்டு-காக்கை ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அநுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே மக்களின் சொத்துக்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (10) மகரகமவில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment