Header Ads



இலங்கையிலிருந்து ஈராக் பயணித்த கப்பல் சிறைபிடிப்பு - கோபமடைந்த ஹஜ்ஜாஜ் முழு சிந்து நாட்டையயும் கைப்பற்றினார்


ஹிஜ்ரி 88 ஆம் ஆண்டு, மாணிக்கத் தீவிலிருந்து (இலங்கை தீவு) ஒரு அரபுக் கப்பல் புறப்படத் தயாரானது. அதில் தந்தைகளை இழந்த அரேபிய முஸ்லீம் பெண்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் ஈராக்கில் சென்று குடியிருக்க முடிவு செய்திருந்தனர் 


அப்போதிருந்த இலங்கை மன்னன் அரேபிய சாம்ராச்சியத்தோடு கூட்டுறவை புதுப்பிக்க இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தினான். அவர்களின் கப்பல் பயணத்திற்கான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்து, அப்போதிருந்த உமவிய்ய பேரரசர் வலீத் பின் அப்துல் மலிக்குக் அவர்களுக்கு தொகையான அன்பளிப்புக்களையும் கொடுத்து கப்பலை வழியனுப்பினான். 


கப்பல் சிந்து நாட்டில் (பாகிஸ்தான்) உள்ள டிபெல் துறைமுகம் வழியாக பஸ்ரா துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​ கடற்கொள்ளையர்கள் கப்பலை கைப்பற்றி அதிலிருந்தவர்களை சிறைபிடித்தனர். 

 

அப்போது ஈராக்கில் இருந்த கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூஸப் சிந்து நாட்டு மன்னருக்கு அந்த முஸ்லீம் பெண்களையும் கப்பலையும் விடுவிக்குமாறு கடிதம் எழுதினார். ஆனால் கப்பலைக் கடத்தியவர்கள் கொள்ளையர்கள் எனவும் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும் பதில் வந்தது. உடனே ஹஜ்ஜாஜ் திபல் துறைமுகத்துக்கு இரண்டு சிறு படைகளை  முதலாவது உபைதுல்லா பின் நபான் தலைமையிலும், இரண்டாவது பதீல் அல்-பஜாலியின் தலைமையிலும் அனுப்பினார். ஆனால் இரண்டு படைகளும் தோல்வியடைந்து, இரு தலைவர்களும் கொல்லப்பட்டனர். 


அந்த முஸ்லீம் பெண்களும் படை வீரர்களும் டிபெல் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களை விடுவிக்க சிந்து நாட்டு மன்னன் பிடிவாயமாக மறுக்கிறான் என்ற செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டியது.


கோபமடைந்த ஹஜ்ஜாஜ் சிந்து நாட்டுக்கெதிராக படையெடுத்து அதனை முழுமையாக கைப்பற்ற முடிவு செய்தார். அதற்காக முஹம்மது பின் அல்-காசிம் என்ற 18 வயதே ஆன இளைஞனை படைத் தளபதியாக நியமித்து அனுப்பி வைத்தார். 


மாவீரர் முஹம்மத் பின் அல்காஸிம் தனது படயோடு ஊர் ஊராக, கோட்டை கோட்டையாக இலகுவாக வெற்றிகள் கண்டார். முஸ்லிம் கைதிகளையும் விடுவித்தார். இறுதியாக சிந்து மன்னன் கோட்டயை வென்று, மன்னன் தாஹிரை கொலை செய்து அவனின் தலையையும் தொகையான வெற்றிப் பொருட்களையும் கிலாபா அரச சபைக்கு அனுப்பி வைத்தார். 


அப்போது கவர்னர் ஹஜ்ஜாஜ்:


"இப்போது எங்கள் சினமும் தீர்ந்தது, பழிக்குப்பழியும் வாங்கிவிட்டோம். பல லட்சக்கணக்கான வெற்றிப் பொருள்களும் கிடைத்துவிட்டது, தாஹிரின் தலையும் கிடைத்துவிட்டது" என்ற புகழ்பெற்ற வாசகத்தை சொன்னார்.


📖 நூல் / அல்பிதாயா வன்னிஹாயா

✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.