Header Ads



தந்தையின் பெயருக்கு ஏற்பட்ட சேதம்தான் எங்களுக்கு கவலை, தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றியடைந்தே தீரும்


"கோட்டாபய அரசில் எடுக்கப்பட்ட நிறைய தீர்மானங்களில் மகிந்த ராஜபக்ச சம்பந்தப்பட்டிருக்கவில்லை. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மகிந்த பொறுப்புக்கூறத் தேவை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,


"காலிமுகத்திடல் போராட்டத்தால் மகிந்த ராஜபக்சவின் பெயருக்கு ஏற்பட்ட சேதம் தான் எங்களுக்கு கவலை. அவருக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது.


கோட்டாபய அரசின் தீர்மானங்களில் மகிந்த சம்பந்தப்பட்டிருக்கவில்லை. பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் பொறுப்புக்கூறத் தேவை இல்லை. அதுதான் அரசியல். நல்ல விமர்சனங்களை மட்டும் எதிர்பார்க்கக்கூடாது. அப்படியானவர்களால் அரசியல் செய்ய முடியாது.


எமது அரசியல் வரலாற்றில் இவ்வாறான பல நிகழ்வுகளை நாம் கடந்து வந்துள்ளோம். இவ்வாறான எல்லா சவால்களையும் எதிர்கொள்ள நான் தயார். நல்லாட்சியிலும் நான் பல சவால்களை எதிர்கொண்டேன். என்னை மூன்று தடவைகள் சிறையில் போட்டார்கள்.


எம்மை அடித்து - கொலை செய்து - வீடுகளுக்குத் தீ வைத்து - அச்சமூட்டி எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது. அரசியல் அதிகாரம் இருப்பது மக்களின் கைகளில்.


நாங்கள் அரசியலில் இருக்க வேண்டுமா, இல்லையா என்று அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். காடைத்தனம் ஊடாக எம் அரசியல் பயணத்தைக் தடுக்க முடியாது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியடைந்தே தீரும் என்றும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பொதுமக்களாகிய எமக்கு நீ பாடம் கற்றுத் தரவேண்டிய அளவுக்கு நாம் அறிவுப்பஞ்சத்தால் பாதிக்கப்படவில்லை. நாம் நல்ல நிலையில் தான் இருக்கின்றோம். குடும்பத்துக்கு வாக்குகளைப் பெற்று இந்த நாட்டில் ராஜபக்ஸ ஆட்சியை நிலைநாட்ட நீயும் உனது குடும்பமும் இந்த நாட்டு மக்களுக்குச் செய்த அநியாயத்தையும், பயங்கரமான களவும் சூறையாடலையும் இந்த நாட்டு மக்களாகிய நாம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். எமக்கு மார்ச் 9 திகதி எமது உரிமையை நீயும் உனது கள்ளக்கூட்டமும் தடைசெய்யாது விட்டுக் கொடுத்தால் நாம் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும் என்பது எமக்கு நன்றாகத் தெரியும். உனது பாடத்தை உனது குடும்ப அங்கத்தவர்களுக்கு நடாத்து. எமக்கு பாடம் கற்பிக்க நீயோ உனது குடும்பமோ தேவையில்லை என்பதை நாம் நிரூபித்துக் காட்டத் தயாராக இருக்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.