ஜப்பானியர்களின் அன்பையும், கருணையும் பெற்ற 2 இலங்கைப் பெண்கள்
ஜப்பானில் தாதியர் சேவை துறையில் தொழில்நுட்ப சேவை பயிலுனர்களாக கடமையாற்றும் இரண்டு இலங்கை யுவதிகள் நாட்டின் முன்னணி சஞ்சிகையான 'வித் ஐஎம்' சாகரவின் அட்டைப்படத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பணியை பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த யுவதிகள், நிறுவனத்தில் உள்ள அனைவரின் அன்பையும் பெற்றிருப்பதுடன், அவர்களின் உயர் ஜப்பானிய மொழித்திறன் மற்றும் வசீகரமான புன்னகை காரணமாக, அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெரியவர்கள் மற்றும் ஜப்பானியர்களின் அன்பும், கருணையும் பெற்றுள்ளமையினால் இவர்களுக்கு இந்த பாராட்டு கிடைத்துள்ளது.
ஹலவத்தாவில் வசிக்கும் காவிந்த்யா சித்துமினி மற்றும் காலியில் வசிக்கும் அஷினி நிமேஷா ஆகியோர் 2021 இல் தாதியர் பயிற்சியாளர்களாக ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
இவர்கள் ஜப்பானின் நாகசாகியில் உள்ள 'லைஃப் டிசைன்' நிறுவனத்தால் நடத்தப்படும் தாதியர் சேவை மையத்தில் செவிலியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
'லைஃப் டிசைன்' நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கட்சுயா, இலங்கை யுவதிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை பயிற்சியாளர்களை நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதில் தயக்கம் காட்டப்படுகின்றது. இந்த இளம் பெண்களின் செயல்களின் அடிப்படையில், அவர்கள் மீது வலுவான நம்பிக்கை.
எதிர்காலத்தில் இலங்கை பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அதிக பங்களிப்பை வழங்குவதற்கு நிறுவனம் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். tw
இந்தப் பெண்பிள்ளைகளைப் பாருங்கள். அவர்களுக்கு சுவீப் டிக்கட் கிடைத்து பணத்தைக் குவித்து மகிழ்ச்சியாக சிரிக்கவில்லை. அவர்கள் தங்கள் திறமையை வௌிப்படுத்தி, யப்பான் நாட்டு மொழியையும் அவர்களின் கலாசாரம் பண்பாட்டைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து, அர்ப்பணிப்புடன் உள்ளும் வௌியிலும் ஒரே உணர்ச்சியுடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றி அந்த நாட்டு மக்களின் கருணையையும் மதிப்பையும் தேடிப் பெற்றுக் கொண்டார்கள். இந்த விடாமுயற்சியும் தியாகமும், அர்ப்பணமும் இருந்தால் யப்பானில் மட்டுமல்ல உலகெங்கும் நாம் முன்னணியில் நிற்கலாம். அந்தப் பெண்கள் இலங்கையருக்கு மட்டுமல்ல அந்த யப்பான் நாட்டு பெண்களுக்கும் ஏன் உலகில் ஏனைய நாடுகளில் வாழும் பெண்களுக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார்கள். அவர்களின் முன்னேற்றத்தின் மகிழ்ச்சியின் இரகசியம் இவைதான். திறமையை வளர்த்துக் கொள்ளல், கடுமையான உழைப்பு,பணியில் அர்ப்பணமும் தியாகமும் நடத்தையில் நேர்மை இந்த குணங்கள் யாரிடம் இருக்கின்றதோ அவர்கள் நிச்சியமாக முன்னேறுவார்கள். அவர்களுக்கு உரிய கௌரவம் உள்நாட்டிலும் உலகெங்கும் கிடைக்கும். அந்த இரகசியங்களை நாமும் கற்று பின்பற்றி தியாகத்துடன் முன்னேறினால் எமது நாடும் யப்பானை விட ஒருபடி மேல். ஆனால் இவை எதுவும் இன்றி ஞானக்கா என்ற கொடும்பாவி போன்ற சூனியக்காரன்களிடம் போய் நீங்களும் அழிந்து மற்றவர்களையும் அழிக்கும் பெரும் பாவங்களில் மட்டும் இதன்பிறகு ஈடுபடவே வேண்டாம் என பொதுமக்களை அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
ReplyDelete