Header Ads



மேலாடை அணியும் உரிமை, மறுக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்கள்

 

- மலையக தாய் -

எனது ஆத்தையின் (அம்மம்மா)  21.04.1908 ம்  ஆண்டு பிறந்த அவர், 21.09.1998 ம் ஆண்டு காலமானார்.


எனது ஆத்தைக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவரது காலத்தில் அவர்களுக்குக் கல்வி கற்கும் (பொதுவாக அனைத்து பெண்களுக்கும்) உரிமை மறுக்கப்பட்டிருந்தது.


அதைவிட அவர்கள் மேலாடை அணியும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது. 14.04.1924 ம் ஆண்டு இதற்கு எதிராக  முதன் முதலாகப் போராடி மேலாடை அணிந்த பெண்களில் அவரும் ஒருவர்.


1973 ம் ஆண்டு சிறீலங்கா அடையாள அட்டை எடுத்தபோது மேலாடை அணியாத படம் தான் எடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்திய சாதிமான்கள் அதிகாரிகளாக இருந்தது வெட்கக்கேடான ஒரு விடயம்.


“1924 ல் மேலாடை அணிவதற்காகப் போராடி, 


நீ எப்படி 1973 ல் இப்படி மேலாடையின்றி புகைப்படம் எடுக்க ஒப்புக் கொண்டாய்?” என்று நான் அப்போது நான் அவரிடம் கேட்டேன்.அதற்கு அவர்  “அப்போது எங்களிடம் ஒற்றுமை இருந்தது.,போராட வேண்டும் என்ற துணிச்சல் இருந்தது.


இப்போது அது இல்லை.” என்று பதில் சொன்னார்.


இவை தான் எங்கள் பகுதி நாடாளுமனற உறுப்பினராக இருந்த மறைந்த தோழர் பொன் கந்தையா போன்றவர்கள் ஏற்படுத்திய எழுச்சியை பின்னால் வந்த தமிழ் கொங்கிரஸ் கட்சியும் தமிழரசுக்கட்சியும் நீர்த்துப் போகச் செய்த வரலாறு.

No comments

Powered by Blogger.