Header Ads



450 விக்கெட்டுகள் வீழ்த்தி அஷ்வின் சாதனை


இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் இன்றைய தினம் -09- புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார். 


சர்வதேச அளவில் அஷ்வின் தான் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் ஆவர். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கிறார்.


இன்றைய தினம்  நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில்,  அஷ்வின் மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தனது 89வது டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகளை அள்ளிவிட்டார் அஷ்வின். இந்த மைல்கல்லை  முத்தையா முரளிதரன் 80 டெஸ்ட் போட்டிகளில் எட்டிவிட்டார்.


டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 450 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை தொட்ட ஒன்பதாவது வீரர் அஷ்வின் ஆவார். 


ஏற்கெனவே கபில்தேவை முந்திவிட்ட அஷ்வின், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரார்கள் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அனில் கும்ப்ளே 619 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

No comments

Powered by Blogger.