SJB, TNA, FPA அரசியல் கட்சிகள் சுதந்திர தின விழாவை புறக்கணிப்பு
பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெற உள்ள 75ஆவது சுதந்திர தின விழாவை பல்வேறு அரசியல் கட்சிகள் புறக்கணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் தேசிய விழாவில் கட்சி கலந்து கொள்ளாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
சுதந்திர மக்கள் காங்கிரஸும் கட்சி கொண்டாட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறியுள்ளது.
இதேவேளை, 75ஆவது சுதந்திர தின விழாவை புறக்கணிக்கும் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.
1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற போதிலும் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காததால் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment