Header Ads



நண்பனின் ஆணுறுப்பை, துண்டாக்கிய நண்பன்


கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மீகஹகியுல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் . 


வியலுவ - தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார் . நேற்று ( 30 ) இரவு அளவுக்கதிகமாக மது அருந்தி குறித்த நபர் மயக்கமடைந்துள்ளார் . அதன்போது , அவருடன் மது அருந்திய சக நண்பர் கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தினால் , மயங்கிக்கிடந்த நபரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது,


பிறப்புறுப்பு வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் கீழே விழுந்த நபரை அவரது ஏனைய நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .

No comments

Powered by Blogger.