Header Ads



ஜனாதிபதியும், பிரதமரும் குப்பை கூடைக்குள் விழுவார்கள் - ரணில் நகர்த்தும் அனைத்து காய்களையும் வீழ்த்துவோம்


தமது துன்ப துயரங்களை வெளிப்படுத்த மக்களை வீதியில் இறங்க விடாத அரசாங்கம், மக்கள் தமது குறைகளை முன்வைப்பதற்காக புள்ளடி இடவும் இடமளிக்காமல் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


ஜனாதிபதியும் பிரதமரும் வரலாற்றில் குப்பை கூடைக்குள் விழுவார்கள்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நகர்த்து அனைத்து சதுரங்க காய்களையும் வீழ்த்துவோம். விளையாட்டுக்கள் மூலம் அதிகாரத்தில் இருக்க முயற்சிக்கும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் கட்டாயம் வரலாற்றின் குப்பை கூடையில் விழுவார்கள்.


மக்களுக்கு எதிராக விளையாடினால், மக்கள் கட்டாயம் விளையாட்டை காட்டுவார்கள் என்பது நிச்சயம். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் அதற்கு தடையேற்படும் வகையில் புாிய சட்டங்களை நிறைவேற்றுகின்றனர்.


கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் மக்களின் ஆணையின் மூலம் கிடைத்தது. எனினும் மக்களின் பாரிய எழுச்சி காரணமாக அவை அனைத்து உடைந்து சிதறிப்போனது.


உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்றால், 50 வீதத்தினால் குறையுங்கள். அதற்கு நாங்கள் இணங்கின்றோம். 50 வீதமாக குறைக்க முடியாவிட்டால், 75 வீதம் குறையுங்கள். அதனையும் நாங்கள் ஏற்கின்றோம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். TW

No comments

Powered by Blogger.