Header Adsஇலங்கைக்கு உதவுமாறு நாம், இந்திய வாழ் முஸ்லிம்களுக்கு விஷேட வேண்டுகோள் விடுக்கின்றோம் - என்.எம்.அமீன்


இலங்கை இன்று ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இதனால் நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மக்களை நெருக்கடியிருந்து நீக்குவதில் அயல் நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவுக்கு பெருமளவில் உதவி செய்ய முடியும். அந்த வகையில் இலங்கையில் எங்களுடைய வர்த்தக முயற்சிகளில் முதலீடுகளை செய்து இலங்கைக்கு உதவுமாறு நாம் இந்திய வாழ் முஸ்லிம்களுக்கு விஷேட வேண்டுகோள் விடுக்கின்றோம். 


இந்திய முஸ்லிம் லீக்கின் அழைப்பையேற்று சென்னை வந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தூதுக்குழுவினருக்கு காயல்பட்டணத்தில் தொழிலதிபர் வாவு எஸ் காதிர் தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவருமான என்.எம்.அமீன் இந்த வேண்டுகோளை விடுத்தார். 


இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் நெருக்கமான தொடர்பு இருந்து வருகின்றது. குறிப்பாக தொப்புள் கொடி உறவு இருந்து வருவதாக எமது மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக காயல்பட்டணம், கீளக்கறை போன்ற இடங்களில் உள்ள முஸ்லிம்களுக்கும், இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. அநேகர் உறவினர்களாகவும் இருக்கிறார்கள். எமது நாடு இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அ


ண்மைக்கால பொருளாதார நெருக்கடி, கொரோனா தொற்று பரம்பல் என்பன காரணமாக நாட்டிலே பாரியதொரு  பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த பின்னடைவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு கட்சி, இன, மத, பேதமின்றி அனைவரும் பாடுபடவேண்டியிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்திலே தென்னிந்திய வாழ் முஸ்லிம்கள், முஸ்லிம் வர்த்தகர்கள் மற்றும் தொழிற்பிரமுகர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் எங்கள் நாட்டில் வந்து முதலீடு செய்யுங்கள். அதன் மூலம் எங்களுடைய நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், எமது நாட்டில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க முடியும். 


இந்திய முஸ்லிம் லீக்கின் அழைப்பை ஏற்று முஸ்லிம் மீடியா போரம் உலக தூதுக்குழுவொன்றை இங்கே அழைத்து வந்திருக்கிறது. நாங்கள் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களுக்கு சென்றோம். இஸ்லாத்தின் ஆரம்ப கால வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள் காயல்பட்டணம் உட்பட பல இடங்களில் காணப்படுகின்றன. இவற்றில் 1300 வருடங்களுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் கீளக்கரையிலே இருப்பதை எங்களால் அவதானிக்க முடிந்தது. 


எங்களது மூதாதையர்கள் இங்கே வந்து இஸ்லாத்திற்கான தொடர்பை வளர்த்திருக்கிறார்கள். காயல்பட்டணத்திலே இருக்கின்ற வாவு வஜீஹா கல்லூரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுவதிளுக்கு கல்வியை போதிக்கின்றது. அந்தக் கல்விக் கல்லூரியை பார்வையிட்டபோது எமக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. பல நண்பர்கள் இணைந்து இந்தக் கல்விக் கல்லூரியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். 


தொழிலதிபர் வாழ்வு சம்சுதீன் அவர்களால் நடாத்தப்படும் வஜிஹா கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயில்கிறார்கள். இந்த கல்லூரியில் கல்வி பயில்வதங்கு இங்கையிருந்தும் எமது மாணவிகளுக்கு சலுகை அடிப்படையில் சில புலமை பரிசில்களை வழங்குமாறு நாம் இந்தக் கல்லூரி ஸ்தாபகர் மற்றும் பணிப்பாளர் சபையிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். 


பாதிக்கப்பட்டிருக்கும் எமது நாட்டு மக்களுக்கு இது பெரும் உதவியாக அமையுமென்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். காயல்பட்டிணத்துக்கும், இலங்கைக்கும் மிக நீண்ட நெடுங்கால தொடர்பு இருக்கின்றது. இந்தக் கல்லூரியின் சின்னங்களில் மாணிக்கக் கற்களை பதிப்பிருக்கிறார்கள். இதன் ஸ்தாபகர் அதிக காலம் இலங்கையிலே தொழில் செய்தவர். இன்னும் தொழில் செய்கிறார். இரத்தினப்புரியிலே அலோசியஸ் கல்லூரியிலே படித்தவர். 


அந்த நன்றிக்காக கல்லூரியில் ஒவ்வொரு கட்டடத்திலும் மாணிக்கக் கற்களை சின்னங்களாக பதித்திருக்கிறார். நாங்கள் இலங்கையிலிருந்து தான் சம்பாதித்தோம் என்ற அந்த நன்றிக்கடனை வெளிப்படுத்துவதற்காகவே அவ்வாறு செய்திருக்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் கேட்பது, நீங்கள் பல்வேறு வர்த்தக துறையிலே ஜாம்பவானாக திகழ்கிறீர்கள். ஆகவே எங்களுடைய நாட்டில் உங்களுடைய வர்த்தகர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்குமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். 


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார், உதவிப் பொதுச் செயலாளர்களான ஜாவித் முனவ்வர், சாதிக் சிஹான் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

1 comment:

  1. அருமையான பதிவு. ஜனாப் என்.எம்.அமீன் அவர்களின் வேண்டுகோளை அவதானிக்கும் போது அவருடைய விரிந்த மனதையும், பரந்த மனப்பான்மையையும்,நாட்டுப்பற்றையும் நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. அவருடைய பணிவான வேண்டுகோளை இந்தியமக்கள் நிச்சியம் நிறைவேற்றி எமது நாட்டு மக்களுக்கு உதவி செய்வார்கள என்ற நம்பிக்கை இந்த இக்கட்டான தருணத்தில் எமக்கு ஒரு தெம்பை வழங்குகின்றது. முஸ்லிம் மீடியா போரத்துக்கும் அதன் ஸ்தாபக தலைவர் அமீன் நானா அவர்களுக்கும் எமது கனிவான நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.