Header Ads



முட்டையை அதிக விலைக்கு விற்கும், மாபியாவுக்கு சில அமைச்சர்கள் துணை


முட்டையை அதிக விலைக்கு விற்கும் மாஃபியாவுக்கு சில அமைச்சர்கள் துணைபோவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.​


குளிர்சாதன அறைகளில் சேமித்து வைக்கப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கும், மீண்டும் அதிக விலைக்கும் விற்கும் மோசடி கும்பல் நடப்பதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச். எம். பீ. ஆர் அழஹகோன் தெரிவித்துள்ளார்.​


அதற்கு சில அரசியல்வாதிகளினதும் ஆதரவு இருப்பதாக அழஹகோன் மேலும் குற்றம் சாட்டினார்.​


“உண்மையில் முட்டை வர்த்தக சங்கங்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அன்று வர்த்தமானியில் 43 ரூபாவுக்கு விற்கலாம் என்று கூறியவர்கள் தற்போது 65, 60 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு பேசுகின்றனர். அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இதனை நுகர்வோருக்கு நேரடியாக வழங்கும் முறையை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். 


அதனடிப்படையில்தான் கொழும்பு நகரில் 400,000 முட்டைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த முறை தோல்வியடைந்ததாக காட்ட முயல்கிறார்கள்

1 comment:

  1. ஒரு நாட்டில் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று முட்டை. அந்த முட்டை மிகவும் கீழ்மட்டத்தில் வாழும் மக்களில் இருந்து உயர்ந்த தரத்தில் வாழும் மக்கள் வரை அனைவருக்கும் அவசியமான ஒரு உணவு தான் முட்டை. அதன் விலையை முகாமைத்துவம் செய்வதற்கு இயலாத நிலையில் ஒரு நாட்டு அரசாங்கம் இருந்தால் அதற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. யார் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவி்ட்டாலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த நாட்டு மக்களுக்குத் தேவையான முட்டை உள்ளூரில் கிடைக்கின்றது. முட்டைத்தட்டுப்பாடு என்பது வெறும் தற்காலிகமானது. அது அவ்வப்போது சரியாகி நிலைமை வழமைக்குத் திரும்பும். ஆனால் கடந்த பல மாதங்களாக அடிமுடி,சட்டமுரணான வகையில் பணம் திரட்டும் அரசியல்வாதிகளுக்கு அதற்கான வாய்புகள் குறைய அவர்கள் தற்போது முட்டையில் கைவைத்திருக்கின்றார்கள். இதனை அரசின் உயர்மட்டத்தில் செல்வாக்குத் செலுத்தும் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மக்களின் தேவைகளை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் செல்லாக்காசாக கருத ஆரம்பித்து, அவர்களின் உள்ரங்க சுரண்டல், சட்டவிரோத செயல்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிகிறது. இந்த நிலைமையில் ஆட்சித் தலைவர் முகவரி தெரியாமல் ஓடிவிடுவாரே என எண்ணத் தோன்றுகின்றது. வெறும் முப்பது ஏக்கர் அரச காணியைச் சொந்தக்கார தொழிலதிபருக்கு எழுதிக் கொடுக்க நுவரெலியா செல்லும் அதிபரின் செயல் அவரிடம் ஆட்சி பற்றிய எந்த இலக்கும், தூரநோக்கும் இல்லை என்பது புலனாகின்றது. இந்த நாட்டு மக்கள், அவர்களுடைய உடமைகள்,சொத்துக்களை விற்று அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வௌிநாடுகளில் குடியேறத் தொடங்கி ஆயிரமாயிரம் பேர்கள் நாள்தோறும் நாட்டைவிட்டு வௌியேறுகின்றார்கள். இது ஒரு நாட்டுக்கு ஒருபோதும் நன்மையைக் கொண்டுவராது. இதனைப் புரியாத புரிந்தும் பொருட்படுத்தாத அரசாங்கம் ஒரு நாட்டுத் தேவையா? அதன் பயன் என்ன? மக்களாணை இல்லாத தலைவர் வெறுமனே நூற்றிருபது பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைகளை மையமாக வைத்து இந்த நாட்டில் வாழும் இருநூற்றி இருபது இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளைப்புறக்கணித்து "ஆட்சி" செய்கின்றார் .நிச்சியமாக இதன் விளைவை இந்த நாட்டு மக்கள் அனைவரும் அனுபவித்தாக வேண்டும்.அதாவது அவர்கள் செய்யாத ஒரு தவறுக்காக அதன்பாரதூரமான விளைவை ஏன் அனுபவிக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் ஆதங்கமாக இருக்கின்றது. இதற்கு பதிலீடு என்ன?

    ReplyDelete

Powered by Blogger.