பச்சை வயல் சூழ்ந்த பிரதேசத்தில், ஒரு தனிநபரின் செலவில் உருவான இறையில்லமும் - அங்குள்ள சில ஏற்பாடுகளும் (படங்கள்)
பச்சை வயல் சூழ்ந்த பிரதேசத்தில், அழகிய கட்டிடக் கலையுடன் கூடிய இந்த மஸ்ஜித், மனதைக் கொள்ளை கொள்கிறது.
சகோதரர் மனாருல் ஹுதா Abmh Hudha, அவரது சொந்த செலவில் இந்த மஸ்ஜிதை நிர்மாணித்துள்ளார்.
பள்ளிவாசல் என்பது தொழுவதற்கான இடம் மட்டுமல்ல, அது பல்வேறு செயற்பாடுகளுக்கான பொதுத் தளம் என்ற புரிதலோடுதான் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது உலமா சபைத் தலைவர் எம்.எம்.அப்துல் லத்தீப் ஹஸரத் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் (நளீமி), கலாநிதி சித்தீக் அஸ்ஹரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இந்த ஆரம்ப நிகழ்வில் பெண்களும், சிறுவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஊர் மக்களுக்கும் அழைக்கப்பட்டோருக்கும் பகலுணவு வழங்கப்பட்டது.
அம்பாரை - அக்கரைப்பற்று வீதியில் பயணிப்போர் இங்கு தொழலாம். முன்னே இருக்கும் பகுதியில், ஓய்வாக அமர்ந்திருக்கும் வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் சுய கற்றலில் ஈடுபடும் ஏற்பாடு பற்றியும், விளையாட்டு வசதிகள், சிறுவர் பூங்கா, நூலகம், அருங்காட்சியகம் பற்றியெல்லாம் இந்தத் திறப்பு விழாழவின்போது பலராலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
படிப்படியாக ஏனைய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இதன் பணிப்பாளர் மனார் குறிப்பிட்டார். நன்றியுரையில் இதை நிர்மாணிக்க துணை நின்ற அனைவரையும் நினைவு கூர்ந்தார்.
முதற்கண் இறைவனுக்கே நன்றி சொன்னார். இறைவனின் நாட்டம் தன் வழியாக நிறைவேறியுள்ளதாகவும் கருத்துரைத்தார்.
அவரது இந்த அழகிய பணியை இறைவன் ஏற்றுக் கொள்வானாக. அவரது விரிந்த நோக்கங்களைப் பொருந்திக் கொள்வானாக.
Siraj Mashoor
Post a Comment