பதிவு செய்யப்படாத, உரிமம் பெறாத பஸ்தான் விபத்து - கெமுனுவின் 4 முக்கிய குறிப்புகளும்
இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இப் பேருந்து இதற்கு முன்னர் பாதை இலக்கம் 280 மற்றும் 315 இல் இயங்கி வந்ததாகவும், ஆனால் பேருந்தின் உரிமையாளர் வெளிநாடு சென்றுள்ளமையினால் குறித்த பாதையில் இருந்து நீக்கப்பட்டு விசேட பயணங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் பல பாடசாலைகளில் கல்விச் சுற்றுலாவிற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லுமாறு தமது சங்கம் பணித்துள்ளதாகவும், உடற்தகுதி சான்றிதழ், அனுமதிப் பத்திரம் மற்றும் பேருந்தின் காப்புறுதிச் சான்றிதழ் போன்ற மிக முக்கியமான ஆவணங்களை சமர்ப்பித்து மாத்திரமே தமது சங்கம் பேருந்துகளை அனுப்புவதாகவும் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கான முழுப் பொறுப்பும் பேருந்தின் சாரதிக்கே உரித்தாக்கப்பட வேண்டுமெனவும், குறித்த பேருந்து இரவு நேர விடுதியாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விபத்தை ஏற்படுத்திய பேருந்தை தெரிவு செய்யும் போது பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஊழியர்கள் பேருந்தின் தரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். Tw
Post a Comment