Header Ads



தேர்தலை நடத்துவதில் சிக்கலா..?


உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . 


தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதால் , இந்த விடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது . 


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவின் தீர்மானத்துக்கு எதிராகவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது . 


இந்தநிலையில் வேட்புமனுக்கள் கோரப்பட்டாலும் தேர்தலை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் கருதுகின்றனர் . 


ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 10 பில்லியன் ரூபாவாகும் . 


எனினும் தேர்தலுக்கான மொத்த செலவு 12 பில்லியன் ரூபா என கூறப்படுவதால் தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . 


எனவே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டாலும் தேர்தல் திகதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர் . 


எனினும் , தேவைப்பட்டால் கூடுதல் நிதியை நிதி அமைச்சகம் வழங்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு நெருக்கமான தரப்புக்கள் கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Hiru

No comments

Powered by Blogger.