பெண் வேட்பாளரை கொடூரமான கொலை செய்துவிட்டு, வீட்டுக்கு தீ வைத்த கொலையாளிகள்
மினுவாங்கொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட யாகொடமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சாந்தி பதிமினி என்ற 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்த பின்னர் அவரது வீட்டிற்கு தீ வைத்து கொலையாளிகள் தப்பித்துள்ளனர்.
குறித்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு கொல்லப்பட்ட பெண் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வருட தேர்தலில் போட்டியிடவிருந்தார்.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கம்பஹா மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment